கொரோனா கிருமி தொற்று என்றால் என்ன?
கொரோனா கிருமி தொற்றின் அறிகுறிகள்
கொரோனா கிருமி (COVID 19) என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த கிருமி காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் சில சமயங்களில் மூச்சு திணறலும் ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறிகள் பதட்டமும் மன அழுத்தமும் ஏற்படுத்தும் .
கொரோனா கிருமி எப்படி பரவும்?
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் இருமுவதின் மூலம் ஆயிரக்கணக்கான கிருமிகளை துளிகள் மூலம் சுற்றுப்புறத்தில் பரவ கூடும்.
இவை பல மணி நேரம் வரை காற்றில் இருக்க கூடும். இதை மற்றவர் சுவாசிப்பதால் கொரோனா கிருமிகள் அவர்களை தாக்கும் .இவை உங்கள் நுரை ஈரல்களுக்கு செல்லலாம்.
கொரோனா கிருமி – சமூக தூரம்
ஒருவர் கைகளையோ, பொது இடங்களில் கிருமிகள் படர்ந்த இடங்களையோ நாம் தொடுவதன் மூலம் இந்த கிருமி நம்மை தாக்க வாய்ப்பு இருக்கிறது . அதனால் தான் ஒருவருடன் பொது இடங்களில் 2 மீட்டர் தூரம் கடைப்பிடித்து, பொது இடங்களையோ மற்றவர் கைகளையோ தொட நேர்ந்தால் 20 விநாடி கை கழுவ வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.
கொரோனா கிருமியால் மனஅழுத்தம்
செய்திகளிலும் சரி , பத்திரிகைகளிலும் சரி இந்த கிருமி தாக்கத்தால் ஏற்படும் இறப்புகளை பற்றி படிப்பதால் மனஅழுத்தம் ஏற்படலாம். இது புரிந்து கொள்ள கூடிய ஒன்று தான்.
அரசாங்கம் வலியுறுத்தும் சமூக தூரம் , வெளி வர தடை மற்றும் நோய் தாக்கியவரை தனிமை படுத்தும் மருத்துவ ஒதுக்கிவைப்பு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
சமூக தூரம் என்றால் என்ன?
சமூக தூரம் என்பது பொது இடங்களில் , மற்றும் மளிகை காய்கறி வாங்கும் இடங்களில் ஒருவரிடம் இருந்து சுமார் 2 மீட்டர் தொலைவில் இருப்பது . இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கிருமி தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அறவே குறைக்கிறது . அதனால் உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் , குழந்தைகளுக்கும் இந்த தாக்கம் ஏற்படுவதை குறைக்கலாம் . ஆனால் இதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
வெளிவர தடை என்றால் என்ன?
வெளிவர தடை என்பது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசாங்கம் நடத்தும் உத்தி. பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரை அரங்குகளை மூடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த கிருமி பரவும் வாய்ப்புகளை கட்டு படுத்த முடியும் .
உங்கள் நண்பர்களை பார்க்க முடியாமல் , திரை அரங்குகள் செல்ல முடியாத சூழ்நிலையும் மன அழுத்தத்தை கொடுக்க கூடும்.
தனிமை படுத்தும் மருத்துவ ஒத்திவைப்பு என்றால் என்ன?
கொரோனா நோய் அறிகுறிகள் உள்ள நபர்களை தனிமை படுத்தும் மருத்துவ ஒத்திவைப்பு முறை அவர்களிடம் இருந்து மற்றவருக்கு பரவும் வாய்ப்புகளை முழுவதாக தடுக்க முடியும் . ஆனால் தனிமையில் இருப்பது பதட்டத்தையும் , மன அழுத்தத்தையும் கொடுக்க கூடம்.
இப்பொழுது இந்த கொரோனா கிருமி தாக்கம் ஏற்படுமா என்ற பதட்டமும் தனிமையில் இருப்பதால் ஏற்படும் பதட்டமும் குறைய 3 உத்திகளை பார்க்கலாம்.
உத்தி 1
உங்கள் மன அழுத்தத்தை சமாளியுங்கள்
“எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொரோனா கிருமி தாக்கம் ஏற்படுமா என்று எப்பொழுதும் பதட்டமாகவே உள்ளது”
மூச்சு பயிற்சி
முதலில் பதட்டத்தை குறைக்க மூச்சு பயிற்சி செய்யலாம் .
5 விநாடி மூச்சை உள் வாங்கி; 5 விநாடி மூச்சை உள் அடக்கி; 5 விநாடிகள் மூச்சை வெளி விடுவதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைக்கலாம்.
பின்னர் கொரோனா கிருமி தாக்கம் பற்றி உங்களுக்கு இருக்கும் கவலைகளை எதிர் கொள்ளலாம்.
உங்கள் மன பதட்டத்தை எதிர் கொள்ள ஒரு எளிய முறை
தினமும் நாம் வண்டியிலோ , பேருந்தியிலோ செல்லும் பொழுது ஒரு சின்ன ஆபத்து இருக்க தான் செய்கிறது .அதற்காக நாம் தொடர்ந்து பதட்ட பட்டு கொண்டே இருக்கிறோமா என்ன? இல்லையே!
தலை கவசத்தையும், இருக்கை வாரையும் அணிந்து கொண்டு விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சில பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்து கொள்கிறோம்.
இதே போல கொரோனா கிருமி பயத்தையும் எதிர் கொள்ளலாம்
இதே போல தான் கொரோனா கிருமி நம்மை தாக்காமல் தடுக்க கை கழுவுவது, சமூக தூரத்தை கடை பிடிப்பது, அரசாங்கம் போடும் விதி முறைகளை கடை பிடிப்பது மற்றும் காய்ச்சல், இருமல் இருந்தால் தனிமை படுத்தி இருப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கையால வேண்டும். மற்ற சில உடல் உபாதை உள்ளவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சரி நடக்க கூடாதது நடந்தால் …..
சில சமயம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் கூட சாலை விபத்துகள் நடக்க கூடும். சில சமையம் உயிர் சேதம் கூட ஆகலாம். அதற்காக நாம் என்ன தினமும் பயந்து கொண்டுவா இருக்கிறோம்? பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து விட்டு அப்புறம் என்ன ஆனாலும் அதற்கு உள்ள வாய்ப்பை தைரியமாக எதிர் கொள்கிறோம். அதே போல தான் இந்த கொரோனா கிருமி பயத்தில் இருந்து நீங்கள் விடுபட இந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டியது மட்டும் தான் நம்மால் முடியும். இதற்கு மேல் இந்த கிருமி தாக்கம் ஏற்பட்டாலும் கூட 98% நல்ல படியாக குணம் ஆக கூடும் என்று நேர்மறையாக சிந்தித்து உங்கள் பயத்தை தூர வீசுங்கள்.
உத்தி 2
உங்கள் நேரத்தை கையாள கற்று கொள்ளுங்கள்
“வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை; சலிப்பு தட்டுகிறது …”
வெளி வர தடையா ? என்ன ஒரு பொன்னான வாய்ப்பு!
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருந்து விட்டு இப்பொழுது வீட்டுக்குளேயே முடங்கி கிடப்பது கடினமாக உள்ளது என்று நினைக்க தான் கூடும் .ஆனால் இந்த நாட்கள் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
திட்டமிட கற்று கொள்ளுங்கள்
நீங்கள் செய்ய நினைத்த வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள். நீங்கள் படிக்க நினைத்த புத்தகங்கள், நீங்கள் பார்க்க நினைத்த படங்கள், நீங்கள் சுத்தம் செய்ய வேண்டுமே என்று நேரம் இல்லாமல் தள்ளி போட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொள்ளுங்கள்.
தினமும் காலை , மதியம் , மாலை வேளைகளில் என்னென்ன செய்ய போகிறீர்கள் என்று திட்டமிட்டு கொள்ளுங்கள். 3 வேளை உணவு உட்கொள்ளும் நேரங்கள், மற்றும் 8 மணி நேரம் தூக்கம் போன்றவற்றையும் திட்டமிட்டு கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:
- காலை – வீட்டுக்குள் ஏதேனும் உடற்பயிற்சி, பின்பு அலுவலக வேலை இருந்தால் அதை செய்வது; வீட்டில் எல்லோருடனும் கலந்து பேசுவது போன்ற வேலைகளை செய்யலாம்.
- பின்பு மதியம் 30 நிமிடம் தூக்கம்
- மாலை வீட்டு வேலைகள் செய்வது என்று ஒரு நாளை வகுத்துக்கொள்ளலாம்.
மனதிற்கு உற்சாகமூட்டும் செயல்களையும் செய்யுங்கள்
சிலருக்கு சமையல் செய்வது உற்சாகம் கொடுக்கும். சிலருக்கு பாட்டு கேட்பது. இன்னும் சிலர் தியானம் மற்றும் கடவுள் வழிபாடு மிகவும் மனதிற்கு நிம்மதியும், உற்சாகமும் கொடுக்கும்.
உங்களுக்கு பிடித்ததை செய்து மகிழுங்கள்.
உத்தி 3
பேசுவதை தவிர்க்காதீர்கள்!
சமூக தூரம் என்பது மனதிற்கு அல்ல! உங்கள் விருப்பம் போல நண்பர்கள் மற்றும் உறவினருடன் புலனம் மற்றும் தொலைபேசியில் பேசலாம்! அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி என்ன ஒரு நல்ல விஷயம் பார்த்தீர்களா?
வேறு எப்படி தொடர்பு கொள்ளலாம்?
வீட்டில் இருந்தபடி தாயம் , பலகை விளையாட்டுகள் , நாம் சின்ன வயதில் விளையாடிய பரமபதம்,பல்லாங்குழி கூட எல்லாருடனும் விளையாடி மகிழ்ச்சி அடையாளம்.
வீட்டு சண்டைகளை சமாளியுங்கள்!
வீட்டுக்குள்ளேயே இருந்தால் சில சமையம் வீட்டாருடன் சண்டை சச்சரவு ஏற்படலாம். இது சகஜம் தான்! சிறிது நேரம் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் சிறிது இடைவேளை கொடுத்து கொண்டால் இந்த பிரச்சனை இருக்காது! சண்டைகளை கூட எளிதாக சமாளித்து விடுவீர்கள்.
மற்றவருக்கு உதவுங்கள்!
உங்கள் பக்கத்து வீட்டில் யாருக்காவது உடல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள். காய்கறி வாங்கி கொடுப்பது, சமையல் செய்து கொடுப்பது மற்றும் ஆறுதலாக பேசுவது எல்லாம் மிக முக்கியமான விஷயங்கள்.